SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகம் முழுவதும் இளநீர் விற்பனை அதிகரிப்பால் தேங்காய் உற்பத்தி 80 சதவீதம் சரிவு

2018-05-17@ 03:11:38

புதுக்கோட்டை : தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கி வருவதால் இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் தேங்காய் உற்பத்தி குறைந்து விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில்  தேங்காய் உற்பத்தியில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும்  உள்ளது.  தற்போது தமிழகத்தில் 3.1 லட்சம் ஹெக்டேரில்  தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சிக்கு அடுத்ததாக தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட தென் மாவட்டங்களில்  தென்னை சாகுபடி நடந்து  வருகிறது.  தென்மாவட்டங்களில் தேங்காய்களில் எண்ணெய்சத்து அதிகம்  இருக்கும் என்பதால் இதன் விலை எப்போதும் அதிகமாக இருக்கும். தென்மாவட்டங்களில்  இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் தேங்காய் விளைச்சல் குறைந்து  ஓராண்டாகவே விலை அதிகமாக உள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கி வருவதால் கடந்த ஒரு மாதமாக இளநீர் விற்பனை அதிக அளவில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வறட்சியினால் அழிந்துவிட்டன. இதனால் இந்த ஆண்டு இளநீர் தேவைக்கு ஏற்ப கொடுக்க முடியவில்லை. இதனால் இளநீர் விற்பனையாளர்கள் கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று மொத்தமாக இளநீரை வாங்கி வருகின்றனர். இதனால் அங்கு தேங்காய் உற்பத்தி குறைந்துவிட்டது. இதே நிலை டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் உள்ளது. இளநீர் விற்பனை அதிகரித்துள்ளதால் தேங்காய் உற்பத்தி 80 சதவீதம் தடைபட்டுள்ளது. இதனால் தேங்காயின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. தற்போது  ஒரு தேங்காய் மொத்த விற்பனையில் ரூ25 முதல் ரூ30க்கும், சில்லரை விற்பனையில் ரூ30 முதல் ரூ35 வரை  விற்கப்படுகிறது. தற்போது தென் மாவட்டங்களில் அனைத்து பெரிய மற்றும் சிறிய கிராமங்களில் சித்திரை, வைகாசி திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதுபோல் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. கோயில்களுக்கு தேங்காய் தேவைஅதிகரித்துள்ளது. ஆனால் தேங்காய் இருப்பு இல்லாததால் விலை உயர்வு உள்ளது. இதன் காரணமாக மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தேங்காய் விலை உயர்வால் தென்னை விவசாயிகளுக்கு லாபம் இல்லை. ஏனெனில்  தேங்காய் விலை உயர்வு ஏற்படும்போது உற்பத்தி குறைவால் விற்பனை செய்வதற்கு  விவசாயிகளிடம் தேங்காய் இல்லை.  இதற்கு முக்கிய காரணம் தென்னை விளைச்சலின் பரப்பளவு குறைவு, தற்போது இளநீர் விற்பனை அதிகரிப்பு போன்ற காரணங்களால்  தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. இளநீர் விற்பனை அதிகரித்தாலும் தென்னந்தோப்பில் மிக குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. குறிப்பாக ஒரு இளநீர் தென்னந்தோப்பில் ரூ8 முதல் ரூ10க்கு கொள்முதல் செய்யப்பட்டு இடை தரகர்கள், விற்பனையாளர்கள் என லாபம் வைத்து ரூ35 முதல் ரூ40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனாலும் எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்..

*கோடையில் இளநீர் விற்பனை அமோகமாக உள்ளதால் தேங்காய் உற்பத்தி 80 சதவீதம் சரிந்துள்ளது.
*சித்திரை, வைகாசியில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதற்காக தேங்காய் தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்துள்ளது.
*விலை உயர்ந்தாலும் உற்பத்தி குறைந்ததால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கவில்லை.
*தென்னந்தோப்பில் ரூ8 முதல் ரூ10 வரை கொள்முதல் செய்யப்படும் தேங்காய் இடைத்தரகர்கள் தலையீட்டால் ரூ35 முதல் ரூ40 வரை விற்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LoSANgelesTeachers

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 30,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம்: பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்!

  • GurugramBuildingCollapse

    ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!

  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்