SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த மூன்று மாதங்களில் பேஸ்புக்கில் 58 கோடி கணக்குகள் முடக்கம்

2018-05-17@ 03:10:30

பாரிஸ் : உலகம் முழுவதிலும் கடந்த மூன்று மாதங்களில் 58 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல கோடி பேரின் தனிப்பட்ட பேஸ்புக் தகவல்களை லண்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு 2016ல் முறைகேடாக பகிரப்பட்டதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த தகவல்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த தவறுக்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் பகிரங்க மன்னிப்பு கேட்டார். மேலும், பேஸ்புக் தவறான பயன்படுத்தப்படுவதை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், போலி கணக்குகள் முடக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதங்களில்  உலகம் முழுவதிலும் 58 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்தது. மேலும், வன்முறைகளை தூண்டும் தீவிரவாத கருத்துகள், ஆபாச படங்களை பரப்பும் வலைதளங்களையும் அது முடக்கி இருக்கிறது. மேலும் உள்ள போலி கணக்குகளும் அடுத்த 3 மாதங்களில் முடக்கப்படும் என்றும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும், கிராபிக் வன்முறை காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்