SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசு திட்டம் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக 3 கி.மீ.க்கு ஒரு சார்ஜ் மையம்

2018-05-17@ 03:09:14

புதுடெல்லி : எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 3 கி.மீ.க்கு ஒரு சார்ஜ் மையம் ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மையங்கள் அளவுக்கு எலக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் செய்வதற்கான மையங்கள் இல்லை. இதுவும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதை தவிர்ப்பதற்கு ஒரு காரணமாக உள்ளது. எனவே, 10 லட்சத்துக்கு மேல் மக்கள் கொண்ட நகரங்கள் மற்றும் ஸ்மார்ட் நகரங்களில் 3 கி.மீ.க்கு ஒரு சார்ஜ் மையம் நிறுவவும், பரபரப்பாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 50 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜ் மையம் நிறுவவும் திட்டமிட்டுளளது. இதற்கான வரைவு திட்டம் தயாரித்துள்ளது.

இதில் 3 முதல் 5 ஆண்டுகளில் 30,000 மெதுவாக சார்ஜ் செய்யும் மையங்களும், 15,000 விரைவாக சார்ஜ் செய்யும் மையங்களும் இடம்பெறும். இந்த மையங்களுக்கான இடம் தேர்வு குறித்து உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் மின்வாரியங்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும். சார்ஜ் மையம் நிறுவ முன்வருவோருக்கு நீண்ட கால உரிமம் வழங்கப்படும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கார் வாங்குவோருக்கு மானியம்
எலக்ட்ரிக் கார்களை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்காக ரூ9,400 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை எக்ஸ்சேஞ்ச் செய்து எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோருக்கு ரூ2.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். ரூ1.5 லட்சம் வரையிலான டூ வீலர்களுக்கு ரூ30,000, ரூ15 லட்சம் வரையிலான கார்களுக்கு ரூ2.5 லட்சம் வரை, பஸ், ரூ2 முதல் ரூ3 கோடி வரையிலான டிரக் மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூ50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GurugramBuildingCollapse

    ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!

  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்