SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏடிஎம்கள் சரியாக வேலை செய்வதில்லை ரூ10 ஆயிரம் பணம் எடுக்க திண்டாடும் வாடிக்கையாளர்கள் : வங்கி உபயோகிப்பாளர் நல அமைப்பு குற்றச்சாட்டு

2018-05-17@ 03:08:23

சென்னை : வங்கி ஏடிஎம் மையங்கள் சரியாக வேலை செய்வதில்லை. ரூ10 ஆயிரம் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் திண்டாடுகின்றனர் என்று தமிழ்நாடு வங்கி உபயோகிப்பாளர் நல அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு வங்கி உபயோகிப்பாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் சுரேஷ் ஆனந்த் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல இடங் களில் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் சரியாக வேலை செய்வதில்லை. ஒரு சில இடங்களில் ஏடிஎம் மையங்கள் வேலை செய்தால் அதில் பணம் கிடைப்பதில்லை. ரூ10 ஆயிரம் பணம் எடுக்க வேண்டுமென்றால் ஒரு சில இயந்திரங்களில் 4 முதல் 5 முறை பணம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. வங்கிகள் செய்யும் தவறுக்கு வாடிக்கையாளர்களிடம் பணம்  பிடித்தம் செய்கின்றனர்.

இந்த பிரச்சனையை தீர்க்கவும், வங்கிகளில் உள்ள குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும் வங்கி வாடிக்கையாளர்களை பாதுகாக்க எங்கள் அமைப்பின் சார்பாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அந்த மனுவில், ஏழை எளியோர்களுக்கு எளிதாக கடன் கிடைக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் ரிசர்வ் வங்கி கடன் வட்டி விகிதத்தை குறைக்கும் போது, வங்கிகள் குறைப்பதில்லை. அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியை அதிகரிக்கும் போது உடனடியாக வங்கிகள் கடன் வட்டி விகிதத்தை அதிகரிக்கின்றனர். கோடிக்கணக்கில் வர வேண்டிய கடனை வசூலிக்காத வங்கிகள் சேவை கட்டணம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றனர். வங்கிகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனையை சரி செய்ய எங்கள் அமைப்பு சார்பில் போராடுவோம் என்றார்.

ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் தர மறுப்பு
ஏழை மாணவர்கள் பணப்பிரச்சனையால் தனது மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக வங்கிகள் மூலம் கல்வி கடன் தரும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் படி சில வங்கிகளில் ஏழை மாணவர்களுக்கு கல்வி கடன் தருவதில்லை. வங்கி மேலாளர்கள் சிலர் கல்வி கடன் தருவதையே தவிர்க்கின்றனர். அதே நேரத்தில் வசதி படைத்தவர்களுக்கு கடன் எளிதாக கிடைத்து விடுகிறது. கல்வி கடன், விவசாய கடனை வசூலிக்கிறோம் என்ற பெயரில் ரவுடிகளை வைத்து வங்கிகள் மிரட்டி வருகின்றனர் என வங்கி உபயோகிப்பாளர் நல அமைப்பினர் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GurugramBuildingCollapse

    ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!

  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்