SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர்ந்து 3 நாட்களில் பெட்ரோல் 50 காசு, டீசல் 69 காசு உயர்ந்தது : இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பெட்ரோல் ரூ5.40, டீசல் ரூ7.35 அதிகரிப்பு

2018-05-17@ 03:06:51

புதுடெல்லி : கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு, தொடர்ந்து 3வது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தினசரி விலை நிர்ணய முறை கடைப்பிடிக்கப்படுகிறது. சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை, கர்நாடக தேர்தல் அறிவித்த பிறகு திடீரென விலை மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து எந்த மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்படுத்தவில்லை. கடந்த மாதம் 24ம் தேதி பெட்ரோல் டெல்லியில் ரூ74.63, கொல்கத்தாவில் ரூ77.32, மும்பையில் ரூ82.48, சென்னையில் ரூ77.43 ஆக இருந்தது.

கர்நாடக தேர்தல் முடிந்ததும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ77.77ல் இருந்து ரூ77.93 ஆகவும், டெல்லியில் ரூ74.95ல் இருந்து ரூ75.10 ஆகவும் உயர்ந்துள்ளது. மூன்று நாட்களில் பெட்ரோல் சென்னையில் 50 காசுகளும், டெல்லியில் 47 காசுகளும் உயர்ந்துள்ளது. டீசல் விலை நேற்று சென்னையில் ரூ70.02ல் இருந்து ரூ70.25 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ66.36 இருந்து ரூ66.57ஆக அதிகரித்துள்ளது. மூன்று நாட்களில் சென்னையில் டீசல் 69 காசுகளும், டெல்லியில் 64 காசுகளும் உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி 1ம் தேதியில் இருந்து நேற்று வரை டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ6.87, சென்னையில் ரூ7.35 உயர்ந்துள்ளது.  பெட்ரோல் விலை ஜனவரியில் இருந்து நேற்று வரை டெல்லியில் ரூ5.13, சென்னையில் ரூ5.40 எகிறியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

  • trumph_floodareaameric

    அமெரிக்காவின் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்!

  • 2018_kalambirth

    அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாட்டம் : நினைவிடத்தில் பல்வேறு அமைப்பினர், மாணவ மாணவிகள் மரியாதை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்