SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இந்தியாவுக்கு 2வது வெற்றி

2018-05-17@ 01:38:47

டாங்கே: தென் கொரியாவில் நடைபெறும் 5வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சீனாவை வீழ்த்தியது. தொடக்க லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணியை  4-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்திய அணி,  தனது 2வது லீக் ஆட்டத்தில்நேற்று சீனாவை சந்தித்தது. தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் நடத்தில் இந்திய அணிக்கு, வந்தனா கட்டாரியா 4வது மற்றும் 11வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். இதைத் தொடர்ந்து, பதில் தாக்குதல் நடத்திய சீன அணிக்கு வென் டான் 15வது நிமிடத்தில் கோல் அடிக்க ஆட்டம் விறுவிறுப்பானது.

மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணி வீராங்கனைகளும் கடுமையாக முயற்சித்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது. 51வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் கோல் அடித்து அசத்தினார். ஆட்ட நேர முடிவில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று சீன அணிக்கு அதிர்ச்சி அளித்தது. தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்திய இந்திய அணி, தனது 3வது லீக் ஆட்டத்தில் இன்று மலேசியாவுடன் மோதுகிறது. நேற்று நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை தோற்கடித்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்