SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2018-05-17@ 01:37:47

* பாகிஸ்தான் அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் (மே 24-28) மோதவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் நாடு திரும்புமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளதால் ராயல்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராடு, ஜாஸ் பட்லர், அலஸ்டர் குக், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.
* ரஷ்யாவில் நடைபெற உள்ள பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியில், லிவர்பூல் கிளப் அணிக்காக விளையாடி வரும் 19 வயது இளம் வீரர் டிரென்ட் அலெக்சாண்டர் அர்னால்டு சேர்க்கப்பட்டுள்ளார்.
* நைட் ரைடர்சுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியை சந்தித்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இன்னமும் உள்ளது என்று அந்த அணியின் கேப்டன் அஜிங்க்யா ரகானே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* வங்கதேச அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றுள்ள 3 டி20 போட்டிகளில் இரண்டை அமெரிக்காவின் புளோரிடாவில் நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
* சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு போட்டியாக எதிர்ப்பு நிர்வாக அமைப்பு ஒன்று உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், டி10 கிரிக்கெட் போட்டிகளால் தற்போது நடைமுறையில் உள்ள 3 வகை கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படலாம் என்றும்  எதிர்கால திட்டங்களுக்கான ஐசிசி சிறப்பு செயற்குழு எச்சரித்துள்ளது.
* செயின்ட் ஜோசப் விளையாட்டு அகடமி சார்பில்  நடைபெற்ற கோடைக்கால 20 நாள் பயிற்சி முகாமில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் 181 மாணவிகள், 287 மாணவர்கள் என  468  தடகளா வீரர், வீராங்கனைகள்  பங்கேற்றனர்.  இந்த முகாமில் பங்கேற்றவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன. இந்த முகாமில் அகடமியை சேர்ந்த 25 பேர் பங்கேற்றனர். அவர்களில் 15பேர்  இந்த ஆண்டு விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனங்களில் சேர உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்