SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இத்தாலி ஓபன் டென்னிஸ் ஒசாகாவை வீழ்த்தினார் ஹாலெப்: கார்சியா முன்னேற்றம்

2018-05-17@ 01:36:59

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட நம்பர் 1 வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) தகுதி பெற்றார். இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் இந்த தொடரின் 2வது சுற்றில், ஜப்பானின் நவோமி ஒசாகாவுடன் நேற்று மோதிய ஹாலெப் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். ஒசாகாவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்த அவர் 6-1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அவர் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

இப்போட்டி 59 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. ஒசாகா தனது முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான விக்டோரியா அசரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு 2வது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் டிமியா பாபோஸை (அங்கேரி) வீழ்த்தினார். அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தனது 2வது சுற்றில் 6-0, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் கயா கானெபியை (எஸ்டோனியா) 2 மணி, 17 நிமிடம் போராடி வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்னர் (9வது ரேங்க்) 7-6 (7-5), 6-7 (2-7), 6-7 (5-7) என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸ் வினோலசிடம் 2 மணி, 52 நிமிடம்  போராடி தோற்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்