SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையின் எப்சி பயிற்சியாளர் கிரிகோரிக்கு சிறப்பு விருது

2018-05-17@ 01:36:26

சென்னை: ஐஎஎஸ்எல் கால்பந்து கோப்பையை  வென்ற சென்னையின் எப்சி அணி பயிற்சியாளர் ஜான் கிரிகோரிக்கு  இங்கிலாந்து பயிற்சியாளர்கள் சங்கம்  விருது வழங்கி பாராட்டி உள்ளது. லண்டனை சேர்ந்தவர் ஜான் கிரிகோரி (64). தேசிய அணியிலும், உள்ளூர் அணியிலும் விளையாடியவர், பின்னர் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு சென்னையின் எப்சி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் சென்னை அணி 2வது முறையாக இந்தியன் சூப்பர் லீக் கோப்பையை வென்றது.  அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  இங்கிலாந்து கால்பந்து பயிற்சியாளர்கள் சங்கத்தின் 26வது ஆண்டு விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் லண்டனில் நடைபெற்றது. விழாவில் ஐஎஸ்எல் கோப்பையை சென்னை அணி வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர்  கிரிகோரியை பாராட்டி  விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணி பயிற்சியாளர் கேரத் சவுத்கேட், பெல்ஜியம் அணி பயிற்சியாளர் ராபர்டோ மார்டின்ஸ், உள்ளூர் லீக் அணியின்  பயிற்சியாளர்கள் பலர் பங்கேற்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்