SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராகுலின் போராட்டம் வீண் : மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி​

2018-05-17@ 00:08:02

மும்பை: ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக போலார்ட் 50, குணால் பாண்டியா 32 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆண்ட்ரூ டை 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ராகுல்-கெயில் ஓரளவு சிறப்பாக தொடக்கத்தை தந்தனர். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 183 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 79, ஆரோன் பிஞ்ச் 46 ரன்கள் எடுத்தனர். இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணி தகுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • GurugramBuildingCollapse

    ஹரியானாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்!

  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்