SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடக ஆளுநர் முடிவுக்கு எதிர்ப்பு : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் காங்கிரஸ் முறையீடு

2018-05-16@ 22:58:36

புதுடெல்லி : கர்நாடகாவில் ஆளுநர் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் காங்கிரஸ் முறையிட்டுள்ளது. எடியூரப்பா பதவியேற்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது. இரவே அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் மனுவை நள்ளிரவே விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி கோரப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி அனுமதிக்கும் பட்சத்தில் நள்ளிரவே விசாரணை நடக்க வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் ஆளுநர் வஜூபாய் வாலா பா.ஜ.க. தனி பெரும் கட்சியாக உள்ளதால் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் முடிவை எடுத்துள்ளார். இதனையடுத்து நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா முதல்வராக பதவியேற்கிறார். ஆளுநரின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனநாயகத்தை நசுக்கும் வகையில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநரின் முடிவை எதிர்த்து நள்ளிரவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கே சென்று காங்கிரஸ் முறையிட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரி காங்கிரஸ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் முறையிட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சூரஜ்வாலா கூறுகையில் தனிப்பெரும் கட்சி என பா.ஜ.க. வை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்துள்ளார். இதேபோல் முன்னர் மேகாலாய, கோவா மற்றும் மணிப்பூரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தனி்ப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் அப்போது ஆளுநர் எங்களை ஏன் அழைக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் ஆளுநர் எடுத்த முடிவு அரவது பதவிக்கே அவமானம் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

  • NagoroJapanVillage

    ஜப்பானில் உள்ள தீவில் வெறிச்சோடிய கிராமத்தை பொம்மைகளால் உயிரூட்டிய பெண்: குவியும் சுற்றுலா பயணிகள்

  • FallFoilageWorld

    உலகின் பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட இலையுதிர் காலத்தின் அழகிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்