SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முடிந்தால் 15 நாட்களுக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து காட்டட்டும்: பாஜகவுக்கு குமாரசாமி சவால்

2018-05-16@ 22:45:48

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ள ஆளுநரின் செயல் ஒருதலைப்பட்சமானது என ம.ஜ.த. தலைவர் குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் ஆளுநரரின் செயல்பாடு உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் அரசியல் அமைப்புகளை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவதாகவும் எதிர்கட்சித் தலைவர்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டு வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

பாஜகவுக்கு பெரும்பான்மை எங்கே உள்ளது?
போதிய பெரும்பான்மை இல்லாதபோது சட்டப்பேரவையில் பாஜக எப்படி நிரூபிக்கும்? என அவர் வினவியுள்ளார். முடிந்தால் 15 நாட்களுக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து காட்டட்டும் என குமாரசாமி சவால் விடுத்துள்ளார். எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் தந்துள்ளது சட்டவிரோதம் என அவர் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்