SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகத்தில் நாளை முதல்வராக பதவியேற்கிறார் எடியூரப்பா : 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு

2018-05-16@ 21:46:59

பெங்களூரு : கர்நாடகத்தில் முதல்வராக பதவிஏற்க எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம்

பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து எடியூரப்பாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

எடியூரப்பாவுக்கு ஆளுநர் மாளிகை கடிதம்

பதவியேற்பு தொடர்பாக ஆளுநர் மாளிகையில் இருந்து எடியூரப்பா வீட்டுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எடியூரப்பா நாளை பதவியேற்கிறார்

கர்நாடக முதலமைச்சராக நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவியேற்கிறார் என பாஜக மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். பெருபான்மையை நிரூபித்த பின் அமைச்சரவை பதவி ஏற்கும் என பா.ஜ.க. நிர்வாகி முரளிதர ராவ் பேட்டியளித்துள்ளார்.

ஜனநாயகத்தை நசுக்கும் வகையில் ஆளுநர் செயல் : குமாரசாமி

ஜனநாயகத்தை நசுக்கும் வகையில் ஆட்சி அமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் தந்துள்ளது சட்டவிரோதம் என ம.ஜ.த. தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்