SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்குடி அருகே கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: அதிகாரிகள் வேடிக்கை; பொதுமக்கள் அச்சம்

2018-05-16@ 21:15:41

காரைக்குடி: காரைக்குடி அருகே தெருக்களில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது.காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆவின், அழகப்பா பொறியியல் கல்லூரி, அழகப்பா பாலிடெக்னிக், தனியார் கெமிக்கல் கம்பெனி, அரசு மருத்துவமனை, பவர் கிரிட், போக்குவரத்து பணிமனை, பள்ளி, கல்லூரி என முக்கிய நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு வகையில் வளர்ச்சியடைந்த இப்பகுதி இன்னும் கிராம ஊராட்சி என்ற நிலையிலேயே உள்ளது. இதனால் வளர்ச்சி திட்டங்கள் போதுமான அளவில் நடைபெறவில்லை. 10 கி.மீ குறைவாகவே கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு வீடுகளிலும் கழிவுநீர் சேகரிப்பு தொட்டி அமைத்துள்ளனர். பல இடங்களில் தெருக்களில் தான் கழிவுநீர் சங்கமம் ஆகி உள்ளது. பெரிய ஊராட்சியாக இருந்தும் கிராம ஊராட்சி நிலையிலேயே உள்ளதால் போதுமான கழிவுநீர் கால்வாய்கள் கட்ட அனுமதியில்லாத நிலை உள்ளது. சாலை, காலியிடங்கள், வீடுகளின் உள்பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் தேங்கும் கழிவுநீரால் பல்வேறு நோய்கள் பரவி வருகிறது.

மாவட்டத்திலேயே மர்ம காய்ச்சலால் அதிகளவில் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். கழிவுநீர் பிரச்சனையால் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில், காரைக்குடி நகராட்சி பகுதியில் செயல்படுத்தப்படும் பாதாளசாக்கடை திட்டத்தை விரிவு படுத்தி அதனை ஒட்டி வளர்ந்து வரும் இப்பகுதியையும் இணைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  முன்னாள் ஊராட்சி தலைவர் மாங்குடி கூறுகையில்,‘‘காரைக்குடி நகர வளர்ச்சிக்கு சங்கராபுரம் ஊராட்சி எல்லைப் பகுதியும் சேர்ந்தே பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பை ஊற்றை பாதுகாக்க காரைக்குடி நகராட்சியில் செயல்படுத்தப்படும் பாதாளசாக்கடை திட்டத்தை இப்பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். இது குறித்து உள்ளாட்சி அமைப்பு இருந்த போதே முதல்வர், உள்ளாட்சி அமைச்சர், மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டது இருப்பினும் கண்டுகொள்ளப்படாத நிலையே உள்ளது. சாலைகளில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க இப்பகுதி பாதாள சாக்கடை திட்ட பணியுடன் சேர்க்க வேண்டும்’’ என்றார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்