SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டியில் 18ம் தேதி மலர்கண்காட்சி முதல்வர் எடப்பாடி துவக்கி வைக்கிறார்: தாவரவியல் பூங்காவில் டி.ஐ.ஜி ஆய்வு

2018-05-16@ 21:13:25

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 122வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 18ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. விழாவிற்காக மேடை அமைக்கும் பணிகள், மலர் செடிகள் அலங்கார பணிகள், அரங்குகள் அமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். இதில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
 22ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். மலர் கண்காட்சியை முன்னிட்டு முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வர உள்ள நிலையில் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

மலர் கண்காட்சி நடைபெற உள்ள ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும், முதல்வர் செல்ல உள்ள பாதைகள் குறித்தும், விழா ேமடை உள்ளிட்ட இடங்களில் நேற்று மேற்கு மண்டல டி.ஐ.ஜி., கார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட எஸ்.பி., முரளி ரம்பா, தோட்டக்கலை இணை இயக்குநர் (பொறுப்பு) சிவசுப்ரமணியம் சாம்ராஜ், டவுன் டி.எஸ்.பி., திருமேனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-08-2018

    17-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்