SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உசிலம்பட்டி அருகே கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்

2018-05-16@ 21:09:26

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே கண்மாயில் அடர்ந்து வளர்ந்திருந்த கருவேல மரங்கள் அகற்றும் பணி நேற்று துவங்கியது.  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் கீரிப்பட்டியில் கடந்த மாதம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் வீரராகவராவ்  பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது, பொதுமக்கள் எங்கள் பகுதியில் உள்ள கண்மாய்யை தூர் வார வேண்டும் என மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்தார். கண்மாயை சுற்றி பார்த்த கலெக்டர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியருடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி சேர்ந்த பாலசுப்பிரமணியன் தாமகா முன்வந்து இலவசமாக தூர்வாரி தருகிறேன் என்று கலெக்டரிடம் கூறினார். கலெக்டரின் ஆணைக்கிணங்க வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் தலைமையில் பூஜை போட்டு தூர்வாரும் பணி நேற்று துவங்கியது. தூர் வாரும் பணியை ஆர்டிஓ சுகன்யா துவக்கி வைத்தார். இதில் தாசில்தார் ராமச்சந்திரன், ஒன்றிய ஆணையர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் தெய்வராமன் சோலை குரும்பன் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.40 ஏக்கருக்கு மேல் உள்ள இந்த கண்மாயில் கருவேல மரங்களை அகற்ற முன்வந்த சமூக ஆர்வலரை பொதுமக்கள் பாராட்டினர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Netajimodi

    நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்