SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகத்தில் ஆட்சியமைக்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததாக கர்நாடக காவல்துறை தகவல்

2018-05-16@ 21:06:19

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிய அரசை அமைக்க எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளதாக கர்நாடக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளை எடியூரப்பா முதல்வராக பதவியேற்க உள்ளதாக காவல்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனையடுத்து பெங்களூருவில் காவலர்கள் யாரும் நாளை விடுப்பு எடுக்கக்கூடாது என கர்நாடக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாக கர்நாடக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.  இதையடுத்து நாளை காலை முதல்வராக எடியூரப்பா பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ம.ஜ.த. தலைவர் குமாரசாமி கூறியதாவது; எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தால் உச்சநீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்தார். தன்னை யாரும் விலைக்கு வாங்க முடியாது, பாஜகவை அழைத்ததன் மூலம் ஆளுநர் இரட்டை நிலையை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 104 தொகுதிகளில் வென்றுள்ள பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவை நீக்கியது பாஜக

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க, பாஜக முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளதாக கர்நாடகா மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டிருந்தது. பின்னர் சற்று நிமிடத்திலேயே அந்த பதிவினை எடுத்துள்ளது.மேலும் கன்னடர்கள் எதிர்பார்த்திருந்த பொற்காலம் வந்து விட்டதாகவும் பாஜக கூறியிருந்தது. காலை 9.30 மணிக்கு எடி. ராஜபவனில் பதவி ஏற்பதாக பாஜக பதிவிட்டிருந்தது. அத்தனை பதிவுகளையும் கர்நாடக பாஜக நீங்கியதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாஜகவைச் சேர்ந்த சுரேஷ்குமாரும் தனது டுவிட்டர் முகநூல் பதிவை நீக்கினார்.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தாரா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு ‘வி’ வடிவ வெற்றி விரல்களை காண்பித்தார் என்று கர்நாடக பாஜக பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • trans_porattam

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான படுகொலையை கண்டித்து பிணம் போல் படுத்து திருநங்கைகள் நூதன போராட்டம்

  • neru_park_chinnamalai11

    நேரு பூங்கா - சென்ட்ரல் மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா!

  • stalin_dmk11

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்