SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

22 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு

2018-05-16@ 20:46:24

சென்னை: 8 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 22 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. விவரங்கள் பின்வருமாறு:

பதவி உயர்வு:
* கன்னியாகுமரி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் சென்னை போக்குவரத்து துணை ஆணையராக நியமனம்.
* சிதம்பரம் ஏ.எஸ்.பியாக இருந்த என்.எஸ்.நிஷாவுக்கு திருச்சி சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பதவி உயர்வு,
* குளச்சல் ஏ.எஸ்.பி.சாய் சரண் தேஜஸ்விக்கு சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக பதவி உயர்வு,

இடமாற்றம்:
* திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் பிரவேஸ் குமார் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யாக இடமாற்றம்,
* சென்னை புளியந்தோப்பு துணை ஆணையர் ஷியாமளா தேவி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு பணியிட மாற்றம்,
* சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சோஷந்த் சாய் அடையாறு துணை ஆணையராக இடமாற்றம்,
* அடையாறு துணை ஆணையர் ரோகித் நாதன் சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம்,
* சென்னை போக்குவரத்து துணை ஆணையர் ஈஸ்வரன் அம்பத்தூர் துணை ஆணையராக இடமாற்றம்,
* அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஸ் ராஜ் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்.பியாக இடமாற்றம்,
* சேலம் எஸ்.பியாக ஹூர்கி ஜார்ஜ், திருப்பூர் எஸ்.பியாக கயல்விழி இடமாற்றம்,
* திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆனி விஜயா, போதைப்பொருள் புலனாய்வுத்துறை எஸ்.பி-யாக இடமாற்றம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

  • 24-01-2019

    24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்