SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடாகாவில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 7ஆக குறைவு

2018-05-16@ 18:04:20

பெங்களூரு: கர்நாடகாவில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது. கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியது. அதன்படி பாரதிய ஜனதா கட்சி-104 தொகுதிகளிலும், காங்கிரஸ்-78 தொகுதிகளிலும், மதசார்மற்ற ஜனதா கட்சி 38 தொகுதிகளிலும், மற்ற கட்சியினர் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேர் மட்டுமே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2008ம் ஆண்டு 8 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இதற்குபின் 2013ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் எம்எல்ஏக்கள் 9 பேர் காங்கிரஸ் கட்சியிலும், மதசார்மற்ற ஜனதா கட்சி 2 பேரும் வெற்றி பெற்று 11 முஸ்லிம் எம்எல்ஏக்களாக உயர்ந்தது. கடந்த 1978ல் அதிகபட்சமாக முஸ்லிம் எம்எல்ஏக்கள் 17 பேராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் 7 முஸ்லிம் எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் மொத்த மக்கள் தொகையில் 13% முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-08-2018

    17-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்