SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

117 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் குமாரசாமி

2018-05-16@ 17:34:31

பெங்களூரு: கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவுடன் மஜத தலைவர் குமாரசாமி சந்தித்து பேசினார். காங்கிரஸ், மஜத சேர்ந்த 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார். காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, மூத்த தலைவர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

முன்னதாக ஆளுநர் மாளிகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அணிவகுப்புக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், மஜத பலத்தை காட்ட எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பும் முடிவு செய்தனர். ஆளுநரின் முன் அணிவகுப்பு நடத்த இருகட்சிகளும் அனுமதி கேட்டிருந்தன. காங்கிரஸ், மஜத கோரிக்கையை கர்நாடக ஆளுநர் வஜூபாய் நிராகரித்தார். இந்நிலையில் ஆளுநருடன் மஜத தலைவர் குமாரசாமி சந்தித்து பேசினார்.

10 பேருக்கு அனுமதி:

காங்கிரஸ், மஜத சேர்ந்த 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரான்ஜபவன் முன் பரபரப்பு


கர்நாடக ஆளுநர் மாளிகை முன் காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மஜத தொண்டர்கள் போராட்டம்


கர்நாடக ஆளுநர் மாளிகை முன் மஜத தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளே அனுமதிக்க கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-08-2018

    19-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்