SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி கீழ்நிலைக் காவலர்கள் மனு

2018-05-16@ 17:19:09

சென்னை: ஊதிய முரண்பாட்டை சரிசெய்வதற்காக தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்திற்கு தமிழகம் முழுவதில் இருந்தும் ஏராளமான காவலர்கள் மனுக்கள் அனுப்பியுள்ளனர். தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டை களைக்க அரசு செலவின செயலாளர் சித்திக் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும்  ஏராளமான கீழ்நிலைக் காவலர்கள் மின்னஞ்சல் மூலமாகவும், தபால் மூலமாகவும் ஏராளமான மனுக்களை அந்த ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

அதில் 1960 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கு இணையாக இருந்த தங்களது ஊதியம் தற்போது மிகவும் முரண்ப்பட்டுள்ளதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை  பார்த்தால் வழங்கப்படும் ஊதியம் ஒரு நாள் ஊதியத்தை விட குறைவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மருத்துவசலுகைகள், போக்குவரத்துப்படி ஆகியவற்றை உயர்த்தியும் பண்டிகை நாட்களில் விடுப்பும் தர வேண்டும் என்றும் காவலர்கள் அளித்துள்ள மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்