SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து விடுவிக்கப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் : நடப்பு பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிப்பு

2018-05-16@ 17:11:10

கோலாலம்பூர்: பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலும் தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்வர் கோலாலம்பூர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து அன்வர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து மலேசிய மன்னர் சுல்தான் முகமதுவை சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அன்வர், அரசியல் காரணங்களுக்காகவே தம் மீது வழக்கு போடப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய தங்கள் தரப்பிற்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் எங்களுடைய அரசியல் வாழ்க்கையை சீர்குலைப்பதற்காகவே  வேண்டுமென்றே பொய் வழக்குகள் போடப்பட்டது. இது முற்றிலும் சதி செயலே என குற்றம்சாட்டினார். ஊழல் மற்றும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது ஆகியவை அன்வர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள். இதனால் 1998 முதல் 2004 வரை சிறையில் அடைக்கப்பட்ட அவர், மீண்டும் 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அன்வர் இப்ராஹிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணியி்ன் ஆதரவோடு தான் மஹதீர் முகமது பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஆட்சிக்கு வந்ததும் அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு வருடங்களில் மஹதீர் முகமது பதவி விலக திட்டமிட்டுள்ளதால், அதன் பின் அன்வர் இப்ராஹிம் மலேசிய பிரதமராக பதவியேற்பார் என தெரிகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்