SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வன்முறை துண்டுதல் உள்ளிட்ட 86.5 கோடி பதிவுகனை நீக்கியது ஃபேஸ் புக் நிறுவனம்

2018-05-16@ 16:06:51

வாஷிங்டன்: சமூக வலைத்தளமான ஃபேஸ் புக் நிறுவனம் 86.5 கோடி பதிவுகனை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. வேறுப்பு, வன்முறையைத் தூண்டுதல் உட்பட சமூக கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை தடுக்க ஃபேஸ் புக் நிறுவனம் தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் ஃபேஸ் புக் நிறுவனம் வெளியிட்டுள்ள 86 பக்க அறிக்கையில் இந்தாண்டு முதல் காலாண்டில் 86 கோடியை 50 லட்சம் தவறான வேறுப்பு, வன்முறையைத் தூண்டும் வகையிலான மற்றும் ஆபாசமான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முந்தைய நாட்களில் ஃபேஸ்புக் நிறுவனத்தை சார்ந்து செயல்படும் 200 செயலிகளுக்கு அந்நிறுவனம் தற்காலிகமாக தடைவிதித்தது. ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடி தேர்தலில் சாதகமாக பயன்படுத்தி கொண்டதாக கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பயனர்களின் தகவல்களை பாதுகாக்க ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தகவல்களை திருடி தவறாக பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் மை பர்சனாலிட்டி செயலி உள்ளிட்ட 200 செயலிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் உண்மை என கண்டறியப்பட்டால் செயலிகள் நிரந்தரமாக தடை செய்யப்படும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் எச்சரித்துள்ளது.   



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்