SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநி கோவில் ஐம்போன் சிலை வழக்கில் அறநிலைத்துறை முன்னாள் ஆணையர் தலைமறைவு

2018-05-16@ 14:32:37

பழநி: பழநி கோவில் ஐம்போன் சிலை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட இந்து அறநிலைத்துறை முன்னாள் ஆணையர் தலைமறைவு ஆகியுள்ளார். பழநி தண்டாயுதபாணி கோயிலில் புதிய ஐம்போன் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக தங்கம் பயண்படுத்தப்பட்டதாகவும், அந்த தங்கத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும் கூறப்பட்ட புகாரில் தலைமை ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் ஏ.கே. ராஜா ஆகியோர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வந்துள்ளனர்.

இந்த வழக்கில் திருத்தனி கோவிலில் ஓய்வு பெற்ற இணை ஆணையர் புகழேந்தி 2004-கில் இந்து சமய அறநிலையத்துறையின் தலைமையிட நகை சரிப்பார்ப்பாளராக இருந்த தெய்வேந்திரன் ஆகியோரும் அன்மையில் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பழநி கோவிலுக்கு சிலை செய்யப்பட்ட போது இந்து சமய அறநிலைத்துறை ஆணையராக இருந்த தனபாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் இதுவரை ஆஜர் ஆகவில்லை இதனால் அவர் தலைமறைவாகிவிட்டதாக கருதி சிலை தடுப்பு போலீசார் தேடிவருகின்றனர்.      

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்