SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை விடுமுறையை கொண்டாட வண்டலூர் உயிரியல் பூங்காவில் குவியும் பார்வையாளர்கள்

2018-05-16@ 01:46:40

சென்னை : கோடை விடுமுறைக்கு வண்டலூர் உயிரியல் பூங்கா களைகட்டியது. குடும்பத்துடன் பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் வாகனங்கள் நிறுத்த முடியாமல் டிரைவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகையான விலங்குகளும், பறவைகளும் ஏராளமாக உள்ளன. இதனைக் காண தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்துவிட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி வந்த வர்தா புயலால் பூங்காவில் உள்ள ஆயிரக்கணக்கான பழமை வாய்ந்த மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் நடக்கக்கூட இடமில்லாத அளவுக்கு பூங்கா காட்சியளித்தது. இதனால் விலங்குகளுக்கு இறைச்சி உள்ளிட்ட உணவு கொடுக்க முடியாத பரிதாப நிலையாக காணப்பட்டது. அப்போது பூங்காவை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் பூங்கா இழுத்து மூடப்பட்டது. இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது வந்து சென்ற பார்வையாளர்களின் எண்ணிக்கையைவிட தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பம், குடும்பமாக பூங்காவுக்கு பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமை விடுமுறை விடப்படும். ஆனால் கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதம் முழுவதிலும் உள்ள செவ்வாய்கிழமை தினங்களிலும் பூங்கா திறந்து வைக்கப்படும் என்று பூங்காநிர்வாகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து குழந்தைகளுடன் பூங்காவில் உள்ள சிங்கம், புலி, கரடி, குரங்குகள், யானை உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளை சுற்றி பார்த்தோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெயில் வாட்டி எடுத்தது. தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டுள்ளதால் பூங்கா ரம்மியமாக காட்சியளித்தது. மேலும் பூங்காவில் அனைத்து வசதிகளும் செய்திருந்தபோதும் வாகன பார்க்கிங் வசதியை சரிவர செய்யாததால் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதில் சாலையோரத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்துவிட்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வருவதுடன் பூங்கா உள்ளே 3கிலோ மீட்டருக்குமேல் நடந்து சென்று பூங்காவை சுற்றி பார்க்க வேண்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதுடன் மேற்படி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பூங்கா உள்ளேயே பார்க்கிங் வசதிகளை சரிவர செய்து தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பூங்கா உள்ளேயே பார்க்கிங் வசதிகளை சரிவர செய்து தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi_bahvan_bang

  வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

 • proteststerliteissue

  சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

 • LibyaCarbombAttack

  லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 • Libyacarbomb7

  லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

 • 26-05-2018

  26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்