SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசரென்காவை வீழ்த்தினார் ஒசாகா

2018-05-16@ 01:37:39

ரோம் : இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, முன்னாள் நம்பர் 1 வீராங்கனை விக்டோரியா அசரென்காவை (பெலாரஸ்) வீழ்த்தினார். இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறும் இந்த தொடரில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அசரென்காவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த ஒசாகா 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அசரென்கா சற்று நெருக்கடி கொடுத்தாலும், சிறப்பாக விளையாடிய ஒசாகா 6-0, 6-3 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தனது முதல் சுற்றில் 6-7 (4-7), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவாவை வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 23 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் கர்லா சுவாரெஸ் நவரோ (ஸ்பெயின்), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), டாரியா காவ்ரிலோவா (ஆஸி.), டொமினிகா சிபுல்கோவா (ஸ்லோவகியா), ஜோகன்னா கோன்டா (இங்கிலாந்து) ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் அலெக்சாண்டர் டோல்கோபோலோவை (உக்ரைன்) வென்றார். ஸ்பெயின் வீரர்கள் ராமோஸ் வினோலஸ், பாப்லோ புஸ்டாவும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

  • 26-05-2018

    26-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்