SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அயர்லாந்துடன் டெஸ்ட் போட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி : கெவின் சதம் வீண்

2018-05-16@ 01:36:54

டப்ளின் : அயர்லாந்து அணியுடன் நடந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அயர்லாந்து அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியதை அடுத்து, அந்த அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது. டப்ளின் தி வில்லேஜ் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. 2ம் நாளில் டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான், 9 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 130 ரன்னுக்கு சுருண்டதை அடுத்து, பாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. கடுமையாகப் போராடிய அந்த அணி 129.3 ஓவர் தாக்குப்பிடித்து 339 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய கெவின் ஓ பிரையன் (34 வயது) அதிகபட்சமாக 118 ரன் (217 பந்து, 12 பவுண்டரி) விளாசினார்.

எட் ஜாய்ஸ் 43, கேப்டன் போர்ட்டர்பீல்டு 32, ஸ்டூவர்ட் தாம்சன் 53 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் முகமது அப்பாஸ் 5, முகமது ஆமிர் 3, ஷதாப் கான் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, கடைசி நாளான நேற்று 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 45 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்து வென்றது. பாபர் ஆஸம் 59 ரன் எடுத்து ரன் அவுட்டானார். இமாம் உல் ஹக் 74 ரன், ஷதாப் கான் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கெவின் ஓ பிரையன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவினாலும், கடைசி வரை போராடிய அயர்லாந்து அணி வீரர்கள் ரசிகர்களின் பாராட்டை அள்ளினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்