SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின் ட்...

2018-05-16@ 01:35:24

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஷஷாங்க் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மனாக மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு கடந்த 3 மாதங்களாக ஓய்வெடுத்து வரும் நட்சத்திர வீரர் நெய்மர், ரஷ்யாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான பிரேசில் அணியில் இடம் பிடித்துள்ளார். ஐபிஎல் டி20 தொடரில், 5 சீசனில் 500 ரன் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. நடப்பு சீசனில் 12 போட்டியில் விளையாடி உள்ள அவர் 514 ரன் குவித்துள்ளார் (அதிகம் 92*, சராசரி 57.11, சதம் 0, அரை சதம் 4).

ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் தடை விதிக்கப்பட்டுள்ள சாந்த் உள்ளிட்ட வீரர்கள் மீதான வழக்கில் ஜூலை மாதத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘இந்திய அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் எங்கள் சுழற்பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாய்’ நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ஜுன் 14ம் தேதி தொடங்குகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்