SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போர்ப்ஸ் பத்திரிகை தகவல் 26.4 பில்லியன் டாலர் வருமானத்துடன் அரேபியாவில் 100 இந்திய வியாபாரிகள்

2018-05-16@ 01:32:51

துபாய் : அரேபியாவில் வசிக்கும் டாப் 100 இந்திய கோடீஸ்வர வியாபாரிகள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அவர்களது ஒட்டுமொத்த வருமானம் 26.4 பில்லியன் அமெரிக்க டாலர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பூர்வீகமாக கொண்டு வளைகுடா நாடுகளில் வசிக்கும் கோடீஸ்வர வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் என்பது குறித்து `2018ம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள்’ என்ற தலைப்பில் போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அரபு நாடுகளில் உள்ள நிறுவனங்களில் தலைவர்களாகவும், செல்வாக்கு படைத்தவர்களாகவும் உள்ள 100 இந்தியர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

இந்த 100 இந்தியர்களின் மொத்த வருமானம் 26.4 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18 லட்சம் கோடியாகும். இதில் 12 பில்லியன் டாலர் வருமானத்துடன் இருப்பவர் யூசுப் அலி. இவர் லூலூ சர்வதேச நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக உள்ளார். இந்த பட்டியலில் 2வது இடம் பிடித்தவர் பிஆர் ஷெட்டி, இவரது வருமானம் 3.6 பில்லியன் டாலராகும், இதில் 3வது இடம் பிடித்துள்ள ரவி பிள்ளையின் வருமானம் 3.5 பில்லியன் டாலராகும். இந்த கோடீஸ்வரர்கள் இந்தியா மற்றும் அரபு நாடுகளில் அதிகம் முதலீடு செய்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்