SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செல்போன் நிறுவன தடைக்கு மறுபரிசீலனை சீனாவுக்கு சாதகமாக டிரம்ப் முடிவு

2018-05-16@ 01:30:55

வாஷிங்டன் : சீன செல்போன் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் உள்ள பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான இசட்டிஇ அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது. இதன் மூலம் அமெரிக்காவில் பல வர்த்தக தொடர்புகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதையடுத்து அமெரிக்க நிறுவனங்களை வாங்குவதற்கும், அமெரிக்காவில் முதலீடு செய்வதற்கும் சீன செல்போன் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதை மறுபரிசீலனை செய்யும்படி பலமுறை சீனாதரப்பில் இருந்து அதிபர் டிரம்ப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் டிரம்ப் அசைந்து கொடுக்கவில்லை. தற்போது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் சீனாவுக்கு சாதகமான முடிவை எடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீன மொபைல் நிறுவனமான இசட்டிஇ நிறுவனத்தின் மீதான தடையை மறுபரிசீலனை செய்யும்படி அமெரிக்க வர்த்தக அமைச்சர் வில்பர் ரோசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘சீன செல்போன் நிறுவன விவகாரம் தொடர்பாக சீனாவுடனும், எனது நண்பர் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் ராஜ்ஷாவும் உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில், ‘சீன செல்போன் நிறுவன விவகாரத்தை கையாளுமாறு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சட்டத்திற்கு உட்பட்டு என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ’’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்