SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர்நிலைகள் புனரமைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

2018-05-16@ 01:17:38

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு மாநிலத்தில் உள்ள 2 ஆயிரத்து 65 ஏரிகளை புனரமைக்க சுமார் 300  கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்ட பிறகு அதற்குண்டான பணிகளை ஆரம்பித்து, செயல்படுத்தியிருக்க  வேண்டும்.  ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை கண்காணிக்காமல், மேற்பார்வையிடாமல், பராமரிக்காமல் இருந்த காரணத்தால் மழை,  வெள்ளக் காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரையும் முறையாக சேமிக்க முடியவில்லை.

இனிமேலும் காலம் தாழ்த்தாமல் ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க  தமிழக அரசு முன்வர வேண்டும்.  மேலும், தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீரில் கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய 65 டி.எம்.சி. தண்ணீரை  பெற்றுத்தர மத்திய பாஜ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குருவை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும். எனவே  தமிழகத்தின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்