SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எத்தனை மோடி வந்தாலும் காங்கிரசை அழிக்க முடியாது : திருநாவுக்கரசர் பேட்டி

2018-05-16@ 01:07:20

சென்னை: எத்தனை மோடி வந்தாலும் காங்கிரஸ் கட்சியை அசைக்க முடியாது என்று திருநாவுக்கரசர் கூறினார். காஞ்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ்  கட்சி செயல்வீரர்கள் கூட்டம் மறைமலை நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். மறைமலை நகர் நகர தலைவர் தனசேகரன் வரவேற்றார். முன்னாள் எம்பி விஸ்வநாதன், மாநில துணைத்  தலைவர் தாமோதரன், வட்டார தலைவர் பால், மாவட்ட பொதுச்செயலாளர் குமாரவேல், பாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு காஞ்சி தெற்கு மாவட்ட கட்சி வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை  ஆகியவை குறித்து நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். பின்னர், திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக தேர்தல் முடிவுகளின்படி எந்த  கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிஜேபிக்கும் பெரும்பான்மையில்லை. அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து  பார்ப்போம். இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையோ ஏமாற்றத்தையோ தரக்கூடியது அல்ல. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்காவிட்டாலும்  கட்சிக்கு சோர்வடைய ஒன்றும் இல்லை.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் ஒரு கட்சி 5 ஆண்டு ஆட்சியில் இருந்தால் அடுத்து வேறு கட்சிதான் ஆட்சி அமைக்கும். மாறிமாறித்தான் ஆட்சி  நடந்து வந்திருக்கிறது.  பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் 20க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்  உள்ளிட்ட பெரிய மாநில முதல்வர்கள், ஆர்.எஸ்.எஸ்.பி., எஸ்பி இந்துத்துவா ஆகிய அமைப்புகள் தொடர்ந்து பிரசாரம் செய்தார்கள். பிஜேபி பெரும்  பணமழையை கர்நாடகத்தில் கொட்டியது. அதிகார துஷ்பிரயோகம் பணம் அனைத்தும் கர்நாடக தேர்தலில் நடந்துள்ளது.  காங்கிரஸ் 38 சதவீதம்   வாக்குகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

காங்கிரசைவிட பிஜேபி 36.2 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது. தேவகவுடா கட்சி 4 மாவட்டத்தில் 17 சதவீதம்தான் பெற்றுள்ளது.  கர்நாடக தேர்தல்  மோடி, ராகுல் காந்திக்கான தேர்தல் அல்ல. சித்தராமையாவுக்கும் எடியூரப்பாவுக்கும் நடந்த தேர்தல். வரும் நாடாளுமன்றத் தேர்தல்தான் மோடிக்கும்  ராகுல் காந்திக்கும் இடையில் நடக்கும் தேர்தல் ஆகும்.  ஒரே மதம், ஒரே சாப்பாடு, ஒரே கட்சி என்ற பிஜேபியின் கனவு நடக்காது.  வெள்ளைக்காரர்களாலேயே காங்கிரசை அழிக்கமுடியவில்லை. ஒரு மோடி அல்ல, ஆயிரம் மோடி வந்தாலும் காங்கிரசை ஒன்றும் செய்யமுடியாது.  காங்கிரஸ் அல்லாத இந்தியாவை உருவாக்கவே முடியாது.

அடுத்து வரும் ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் ஆளும் பிஜேபிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும்.இவ்வாறு அவர்  தெரிவித்தார். முன்னதாக திருநாவுக்கரசருக்கு சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் இருந்து ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-08-2018

  17-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • gggooooverrr

  அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

 • affffgaaaaa

  ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

 • iiiiiiiiiiitaaalyyy

  இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

 • keeeraaalaaaa

  கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்