SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 102 டிகிரி வெயில்

2018-05-16@ 00:33:18

சென்னை: தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட திருத்தணியில் வெயில் நேற்று அதிகமாக கொளுத்தியது. அதிகபட்சமாக அங்கு 102 டிகிரி  பதிவானது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் சென்னையில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் வெயில் வாட்டி வதைத்தாலும்  தென் மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால், தென் மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில், சென்னை மட்டும் இல்லாது கடந்த சில தினங்களாக திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் வெயில் சதம் அடித்து வந்தது.

 நேற்று திருத்தணியில் மட்டுமே வெயில் சதம் அடித்தது. திருத்தணியில் அதிகபட்சமாக நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை மற்றும்  மற்ற மாவட்டங்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் குறைவாகவே காணப்பட்டது. இதேபோல தமிழகத்தில் பல இடங்களில்  வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் வெப்ப சலனம் காரணமாக நேற்று திருச்செங்கோட்டில் 7 செ.மீ மழையும், தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 6  செ.மீ மழையும் பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்