SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் ஓரின சேர்க்கையை எதிர்த்து ஐஐடி மாணவர்கள் வழக்கு

2018-05-16@ 00:14:17

புதுடெல்லி: ஒப்புதலுடன் நடைபெறும் ஓரினச் சேர்க்கையை எதிர்த்து ஐஐடி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஓரினச் சேர்க்கையை குற்றமாக அறிவித்து கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்திருந்தது. இது தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு  மாற்றியும் பரிந்துரை செய்திருந்தது. இது தவிர சட்ட அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகமும் இது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரிக்கை விடுத்திருந்தது. ஓரினச் சேர்க்கையை குற்றமாக அறிவித்து, கொண்டு  வரப்பட்ட சட்டத்தினை அங்கீகரிக்கும் 377வது பிரிவை நீக்கும் முடிவு  அந்த அமர்வு பரிசீலித்து தீர்ப்பளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் ஐஐடி மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட லெஸ்பியல் ஓரின சேர்க்கையாளர், திருநங்கை கூட்டமைப்பு சேர்ந்த 20 பேர் தற்போது புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்