SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐபிஎல் டி20 போட்டி : கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2018-05-15@ 23:31:06

கொல்கத்தா: ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தியது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக ஆடியது. பிறகு சீட்டு கட்டுபோல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பட்லர் 39 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய லின்-சுனில் நரேன் வாணவேடிக்கை காட்டினார். இறுதியில் கொல்கத்தா அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக லின் 45, தினேஷ் கார்த்திக் 41 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • purijaggannathartemple

    உலக புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் : கோலாகல கொண்டாட்டம்

  • WorldCup2018France

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2வது முறையாக பிரான்ஸ் அணி சாம்பியன்: ரூ.256 கோடி முதல் பரிசு

  • 16-07-2018

    16-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-07-2018

    15-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 14-07-2018

    14-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்