SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க தூதரகம் திறப்புக்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொலை : ஐ.நா. கடும் கண்டனம்

2018-05-15@ 11:00:36

காசா: அமெரிக்க தூதரக இடமாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களை சந்தித்த பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா.வின் நிரந்தர பார்வையாளர் ரீயாஸ் மன்சூர் இந்த விவகாரத்தில் இஸ்ரேலின் நடவடிக்கை அமைதியைக் குலைக்கும் வகையில் இருப்பதாக ஐநா குற்றம் சாட்டியிருப்பதாக கூறினார். இது தொடர்பாக மிக விரைவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூடி, அதற்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்தி பாலஸ்தீனத்தின் ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகம் மாற்றப்பட்டதற்கு துருக்கி, ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  

முன்னதாக, ஜெருசலத்தில் அமெரிக்க தூதரகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசா எல்லைப்பகுதியில் பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதியில் வீரர்களை இஸ்ரேல் குவித்திருந்தது. சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன போராட்டக்காரர்கள் எல்லையில் திரண்டு அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிட்டனர். காசா எல்லை உட்பட 5 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேஸ் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 வயது சிறுவன் உட்பட 58 பேர் பலியானார்கள். மேலும், 900 பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்தனர்.

எல்லையில் பயங்கர கலவரம் நடந்து கொண்டிருந்த நிலையில்,  டிரம்ப் அறிவித்தப்படி ஜெருசலத்தில் அமெரிக்க தூதரம்  திறக்கப்பட்டது. இதற்கான விழாவில் அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, அதிபரின் மூத்த ஆலோசகர் மற்றும் மருமகன் ஜேர்டு குஷ்னர் உள்ளிட்டோர் அடங்கிய உயர் பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நேதன்யாகுவும் அமெரிக்க தூதரக திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-08-2018

    16-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-08-2018

    15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்