SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எந்தத் தேர்தலில் இருந்து விரலில் மை இடுவது அமலானது?

2018-05-15@ 10:38:19

இந்தியாவின் முதல் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் மிகப்பெரிய சவாலை சந்தித்தது. வாக்களித்தவர்களை அடையாளப்படுத்தாததால் ஒருவரே பல ஓட்டுகளைப் பதிவு செய்தனர். இப்பிரச்னையைச் சரி செய்ய தேர்தல் ஆணையம் நேஷனல் பிசிக்ஸ் லேபரேட்டரியை நாடியது. முனைவர் எம்எல்.கோலின் தலைமையில் விஞ்ஞானிகள் குழு இந்தியர்களுக்கான தேர்தல் மையை கண்டுபிடித்தது. இது இடதுகை சுட்டுவிரலில் நகமும் சதையும் சந்திக்கும் இடத்தில் நீளமாக கோடு போன்று இழுக்கப்படும். இது சில்வர் நைட்ரேட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

ஊதா நிறத்தில் இருக்கும் இந்தக் கலவை காற்று பட்டதும் அல்ட்ரா வயலட் கதிரால் கருப்பாக மாறிவிடும். அதுமட்டுமல்லாமல் இந்தச் சாயத்தை தண்ணீரால் நீக்க முடியாது. நான்கு மாதங்கள் வரை இது இருக்கும். இந்த சாயத்தை மைசூர் வார்னிஷ் மற்றும் பெயிண்ட்ஸ் கம்பெனி இந்திய தேர்தலுக்காகத் தயாரித்து தருகிறது. ஏறத்தாழ 2 லட்சம் லிட்டர் சாயம் தயாரிக்கப்படுகிறது. 1962ல் நடைபெற்ற மூன்றாவது லோக்சபா தேர்தலில் இருந்து இந்த மை உபயோகிக்கப்பட்டு வருகிறது.

பாட்டிலில் ஊற்றிச்சாய்த்துப் பூசுவதை விட மார்க்கர் பேனா மூலம் பூசினால் கிட்டதட்ட 5மி.லி.யை வைத்து 600 பேருக்கு வைக்கலாம். தேர்தல் ஆணையத்துக்கும் செலவு குறையும். அலுவலர்களுக்கும் வேலை எளிதாக இருக்கும் என்ற கருத்து தற்போது வலுப்பெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க ஆதார் அட்டை மூலம் விரல்ரேகையைப் பதிவு செய்து வாக்களித்தால் இது போன்ற மை வைக்கும் நிலைக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VenezuelaProtestMaduro

    அதிபர் மதுரோ பதவி விலகக்கோரி வெனிசுலாவில் வலுப்பெற்றுள்ள போராட்டம்: வன்முறையில் இதுவரை 13 பேர் பலி

  • ChinaAIRestaurant

    முழுக்க முழுக்க ரோபோக்களால் செயல்படும் உணவகம்..: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திறப்பு

  • GreenLandIceLoss

    கிரீன்லாந்தில் நான்கு மடங்கு அதிகமாக உருகி வரும் பனிப்பாளங்கள்..: விஞ்ஞானிகள் கவலை!

  • BuShFiReTaSmAnIa

    ஆஸ்திரேலிய புதர்காடுகளில் பற்றி எரியும் காட்டுத் தீ...: 720 கி.மீ தூரத்திற்கு தீ பரவும் அபாயம்

  • 24-01-2019

    24-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்