SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

2018-05-15@ 10:32:12

இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவப்பிரிவு சிஆர்பிஎஃப் (சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் போர்ஸ்). இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. 1939ல் உருவாக்கப்பட்டது. அப்போது இதன்பெயர் ‘கிரௌன் ரெப்ரசென்டேடிவ் போலீஸ்’ என்பதாகும். பின்பு 1949ல் தற்போதைய பெயருக்கே மாற்றப்பட்டது. இரண்டு பெண்கள் பட்டாலியன் உட்பட 210 பட்டாலியன்களை கொண்டுள்ளது. நாட்டின் பிரபல வழிபாட்டுத்தலங்கள் பலவற்றின் பாதுகாப்பை இது மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சிஆர்பிஎஃபின் துணைப்பிரிவே ‘கிரீன் ஃபோர்ஸ்’ எனப்படும்.

தும்மல் ஒரு அபசகுணம் என்றும், யாரோ நம்மை நினைக்கிறார்கள் என்றும் பல மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. ஆனால் நம் நாசியில் உள்ள மியூகஸ்சவ்வின் நரம்புமுனைகள் எரிச்சல்படும்போது உடல்காட்டும் எதிர்ப்பே தும்மல் ஆகும். ஜலதோஷம் பிடிக்கும்போதோ தூசுகள் நம் மூக்கினுள் புகுந்து விடும்போதோ நம்நாசி நரம்பு முனைகள் எரிச்சலுறுகின்றன. அவ்வேளையில் தும்மல் ஏற்படுகிறது. தும்மலினால் தூசுதுகள் வெளியேறி புத்துணர்ச்சி பெறுகிறோம்.

விரலையோ, கை, கால்களையோ ரப்பர் அல்லது கயிற்றால் இறுகக் கட்டினால் அந்த இடம் குளிர்ந்து போய்விடுகிறது. இதற்கு ரத்த ஓட்டத் தடையே காரணம். அதாவது மனித உடலின் நிறமும், வெப்பமும், உடலின் பல பாகங்களினுள் ரத்தம் மூலம் பயணித்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற நேரங்களில் விரல் நுனியை நாம் இறுகக்கட்டிவிட்டால் அப்பகுதிக்கு ரத்தம் பாய்வது தடைபடும். இதனால் ரத்தம் பாயாத அப்பகுதி வெளிறிவிடும். உடலுக்குத் தேவையான வெப்பத்தைத்தரும் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அங்கு இல்லாத காரணத்தினால் குளிர்ந்து விடுகிறது. இதுவே குளிர்ச்சிக்குக் காரணம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்