SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இலங்கைப் போரில் உயிர் நீத்த இந்திய அமைதிப்படையினருக்கு பிபின் ராவத் மரியாதை

2018-05-15@ 03:39:29

கொழும்பு : இலங்கையில் நடைபெற்ற போரில் உயிர் நீத்த இந்திய அமைதிப் படையினரின் நினைவிடத்தில், இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் அஞ்சலி செலுத்தினார். கடந்த 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழ போராளிகளின் ஆயுதத்தை களையவும் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பப்பட்டது. இதையடுத்து, அங்கு ஏற்பட்ட போரில், இந்திய அமைதி படையினர் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவாக  அங்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகேவின் அழைப்பை ஏற்று இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், போரில் உயிர்நீத்த அமைதிப் படையினருக்கு அவர்களின் நினைவுச் சின்னத்தில் நேற்று மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். நேற்று முன்தினம் இலங்கை சென்றுள்ள பிபின் ராவத், அங்கு ஒருவார காலம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்