SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பலத்த எதிர்ப்புக்கு இடையே ஜெருசலமில் அமெரிக்க தூதரகம் திறப்பு : 37 பாலஸ்தீனியர் சுட்டுக்கொலை

2018-05-15@ 03:37:18

காசா : எல்லையில் நடந்த போராட்டத்தில் 37 பாலஸ்தீனியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஜெருசலமில் அமெரிக்க தூதரகம் நேற்று திறக்கப்பட்டது. கடந்த 1967ம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போரின்போது கிழக்கு ஜெருசலம் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக பாலஸ்தீனம் குற்றம்சாட்டி வந்தது. அதே நேரத்தில் ஜெருசலமை இஸ்ரேல் தனது தலைநகராக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார். இதையடுத்து, அமெரிக்க தூதரகம் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலமுக்கு மாற்றப்படும் என்றும், அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவிற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
யூத, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலம் நகரை இஸ்ரேல் தலைநகர் என டிரம்ப் அறிவித்தது  சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த அறிவிப்புக்கு அரபு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜெருசலத்தில் அமெரிக்க தூதரகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசா எல்லைப்பகுதியில் பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதியில் வீரர்களை இஸ்ரேல் குவித்திருந்தது. சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன போராட்டக்காரர்கள் எல்லையில் திரண்டு அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிட்டனர். காசா எல்லை உட்பட 5 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேஸ் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 வயது சிறுவன் உட்பட 37 பேர் பலியானார்கள். மேலும், 900 பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்தனர்.

எல்லையில் பயங்கர கலவரம் நடந்து கொண்டிருந்த நிலையில்,  டிரம்ப் அறிவித்தப்படி ஜெருசலத்தில் அமெரிக்க தூதரம்  திறக்கப்பட்டது. இதற்கான விழாவில் அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, அதிபரின் மூத்த ஆலோசகர் மற்றும் மருமகன் ஜேர்டு குஷ்னர் உள்ளிட்டோர் அடங்கிய உயர் பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்மின் நேதன்யாகுவும் அமெரிக்க தூதரக திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்