SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பருவமழை கொட்டுகிறது இலங்கையில் வெள்ளம்: 8,000 மக்கள் பாதிப்பு

2018-05-15@ 02:25:48

கொழும்பு: இலங்கையில் தென் மேற்கு பருவமழை கொட்டி வருகிறது. காலே மற்றும் கலுதாரா மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காலேவில் 7,742 பேரும், கலுதாராவில் 635 பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். நேற்று காலை மழை ஓய்ந்ததால், நிலைமை சீரடைந்திருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் கோடிப்பிள்ளி தெரிவித்துள்ளார்.

எனினும், அடுத்த சில நாட்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 92 பேர் உயிரிழந்தனர். 110 பேர் மாயமாகினர். நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, சுமார் 20,000 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • babyballon_trump

    பேபி பலூனில் அதிபர் டிரம் முகம் : அமெரிக்க அதிபரை விமர்சித்து வினோத பரப்புரை

  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்