SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண்டிற்கு ஒருமுறை மேல் ஓடுகளை கழட்டும் நண்டுகள்

2018-05-14@ 10:24:04

நண்டு உலகின் எல்லா கடல்களிலும் காணப்படும் நீர்வாழ் உயிரி ஆகும். நன்னீர்நிலைகளிலும் இவை காணப்படும். சில மில்லிமீட்டர் அகலமான நண்டுகள் முதல் கால்கள் நான்கு மீட்டர் வரை வளரும் ஜப்பானிய சிலந்தி நண்டு வரை பல அளவுகளிலும் காணப்படுகிறது. இவை பொதுவாக தட்டையான ஓடும். ஐந்துஜோடி கால்களும் கொண்டிருக்கும். இதில் முதல்ஜோடி கால்கள் கவ்விகளாக மாற்றமடைந்துள்ளன. ஆண்டிற்கு ஒருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்து கொள்கின்றன. நண்டுகள் கூட்டுக்கண்கள் இரண்டை கொண்டுள்ளன.

பெண் நண்டுகள் அகலமான வயிற்று பகுதியை கொண்டுள்ளன. இதில் முட்டைகளை கொண்டிருக்கும். கடலுணவுகளில் 20 சதவீதம் நண்டுகளே. ஆண்டிற்கு 1.5 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நண்டுகள் உலகம் முழுவதும் உணவாகின்றன. தேங்காய்நண்டு, குளுவான்நண்டு, நீலக்கால் நண்டு என்று பல்வேறு வகைகள் உள்ளன. தேங்காய்நண்டு என்பது உலகில் இன்று வாழும் மிகப்பெரிய கணுக்காலி உயிரினம் ஆகும். இவை சுமார் 40செமீ.நீளமும், 4.1கிலோ எடையும் கொண்டது. இவை மரங்களின் மீது குறிப்பாக தென்னை மரங்களின் மீது ஏற வல்லவை.

இந்த நண்டு இனங்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு உட்பட்ட தீவுகளில் மட்டும் காணப்படுகின்றன. இவ்வகை நண்டுகள் கடலில் முட்டையிடும். சிலநாட்களுக்கு பின்னர் முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள், சிப்பி மற்றும் சங்குகளில் ஒட்டிக்கொண்டு உயிர் வாழத் துவங்கும்.  ஓரளவிற்கு வளர்ச்சி அடைந்த பின்னர் நிலத்தில் குழிகளை தோண்டி அதில் தேங்காய் நார்களை பரப்பி வாழும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

  • Libyacarbomb7

    லிபியாவில் நடத்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்