SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதோடு பேசுவோம் : மூலிகை மருத்துவர் சக்தி சுப்ரமணியம்

2018-05-13@ 00:55:01

* கடுமையான காதுவலிக்கு ஐந்தாறு துளி வெள்ளைப் பூண்டு சாற்றை காதினுள் விட்டால் உடனே காதுவலி தீரும்.
* காதினுள் புழுக்கள் இருந்தால் அல்லது காதுவலி இருந்தால் சிலதுளி காடியை (விநிகர்) காதினுள் விட்டால் புழுக்கள் செத்துவிடும். காதுவலியும்  குணமாகும்.
* வெற்றிலைச் சாற்றைப் பிழிந்து இரண்டு மூன்று சொட்டுக்கள் காதில் விட்டால் காதுவலி அகலும்.
* வெள்ளைப்பூண்டை இடித்து பஞ்சுபோல் செய்து மெல்லிய துணியில் முடிச்சுப்போட்டு அனலில் காட்டிப்பிழிந்து அந்த தைலத்தை 3 அல்லது 4  துளிகள் காதில் விட்டுவர காது மந்தம், வலிகள் தீரும்.
* மல்லிகைப் பூவையும் இலையையும் சேர்த்து இடித்து அதிலிருந்து சாறுபிழிந்து சமஅளவு நல்லெண்ணைய் சேர்த்து காய்ச்சி இரவில் காதில் நான்கு  துளி விட்டுவர காதில் சீழ் வடிதல் நின்று விடும்.
* மாதுளம் பழத்தின் ரசத்தை சூடாக்கி அதில் இரண்டு துளிகள் காதில் விட்டால் வலி குணமாகும்.
* ஊமத்தம் பூவை கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அதில் இரண்டு துளிகள் காதில் இட வலி நீங்கும்.
* பத்து கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை ஐம்பது மி.லி.நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி இரண்டொரு துளிகள் காதில் இட்டு வந்தால் காது மந்தம்  நீங்கும்.
* இரண்டு கிராம் பெருங்காயத்தை இருபது மி.லி. நல்லெண்ணையில் காய்ச்சி வடித்து ஓரிரு துளி காதில் இட்டால் காதுவலி குணமாகும்.
* குழந்தைகளுக்கு காதுவலி ஏற்பட்டால் துளிச்சாறு, தேன், உப்பு மூன்றையும் கலந்து உள்ளுக்கு ஒரு தேக்கரண்டி வீதம் மூன்றுவேளை கொடுக்கலாம்.
* காதுகளுக்குள் ஈ, கொசு போன்றவை புகுந்து கொண்டால் குப்பைமேனி இலையில் சிறிது நீர் தெளித்துக் கசக்கி நான்கு துளி சாற்றைப் பிழிந்தால்  அவை இறந்து விடும். பின்னர் எளிதாக அவற்றை காதிலிருந்து வெளியேற்றிவிடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்