SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடைக்கு உகந்த உணவுகள்...

2018-05-13@ 00:53:46

கோடையில் பலரும் சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று, `டீஹைட்ரேஷன்’’ எனப்படும் உடல் வறட்சி. நம்மில் பலர், இதை தடுப்பதற்கு எந்த  முயற்சியும் எடுப்பதில்லை. இதை தடுக்க சில டிப்ஸ்... குழந்தைகள் மற்றும் முதியோரை இது அதிகம் பாதிக்கும். கோடையில் தளர்வான பருத்தி  உடைகளை அணிவது நல்லது. அதிலும் வெள்ளை, மங்கலான நிறம் கொண்ட உடைகளை உடுத்துவது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கோடையில்  அணிவதற்கென பிரத்யேகமான உடைகள் கடைகளில் கிடைக்கிறது. அவற்றை அணியலாம். வெள்ளைநிற பருத்தி உடை கோடை காலத்துக்கு ஏற்றது.

கோடையில் சூரிய ஒளி நம் உடலில் அதிகம் படுவதால், சோடியம், பொட்டாசியம் போன்றவை அடங்கிய எலெக்ட்ரோலைட்டுகள் நமக்கு  தேவைப்படும். எலெக்ட்ரோலைட்டுகள் அதிகம் கொண்டது இளநீர். இதை அருந்துவதன் மூலம் அதை ஈடுகட்டலாம். வெயிலில் விளையாட செல்லும்  குழந்தைகளுக்கு எலெக்ட்ரோலைட்டுகள் நிறைந்த இளநீரை குடிக்க கொடுப்பது நல்லது. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக இளநீர்தான் மிகவும் சுத்தமானது.  இளநீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தாமல், 10 மணிக்கு மேல் அருந்துவது சிறந்தது. இது, டீஹைட்ரேஷனிலிருந்து நம் உடலை காக்க  உதவும்.

கோடையில் குழந்தைகளும், வயதானவர்களும் எச்சரிக்கையாக இருக்கவேண்டியது அவசியம். கோடையில் அம்மை, வியர்க்குரு, மெட்ராஸ்-ஐ  எனப்படும் கண் நோய் போன்றவற்றோடு பேன் தொல்லையும் ஏற்படலாம். உடல்சூடு அதிகரித்தால், பேன்கள் பல்கி, பெருகும். எனவே, எச்சரிக்கையாக  இருப்பது நல்லது. கடைகளில் விற்கப்படும் பேக்கரி பண்டங்கள், ஜங்க் புட் ஆகியவை குழந்தைகளை சுண்டி இழுக்கும். இவற்றை சாப்பிடுவதை  தவிர்க்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக தர்பூசணி பழம் சாப்பிடலாம். தர்பூசணியில் 92 சதவீத நீர்ச்சத்து உள்ளது. இது, `டீஹைட்ரேஷன்’’  ஏற்படாமல் பாதுகாக்கும். வெள்ளரி, திராட்சை போன்றவற்றின் விதைகளிலும் பல ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.

அவற்றையும் சாப்பிடலாம். தர்பூசணி விதைகளை ஊறளவைத்து சாப்பிடலாம். இந்த விதைகள், சிறுநீரக கோளாறுகளை நீக்கும். தர்பூசணி  சாப்பிடும்போது அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது. சுகாதாரமான சூழலில் விற்கப்படும் இதர பழங்களையும் வாங்கி சாப்பிடுவது  ஆரோக்கியத்துக்கு நல்லது. தக்காளி, சூட்டை தணிக்கும். எனவே, கோடையில் தக்காளி ஜூஸ் அருந்தலாம். இது நேச்சுரல் சன்ஸ்கிரீன் ஆக  செயல்பட்டு சருமத்தையும் பாதுகாக்கும். வெயில் காலத்தில் லெமன் ஜூஸ் அருந்துவதும் நல்லது. இது, சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். உடலுக்கு  புத்துணர்ச்சி தரும். சர்பத், நன்னாரி சர்பத், நுங்கு, பழக்கலவை போன்றவை உடல்சூட்டை தணிப்பவை. இவை, எலெக்ட்ரோலைட்டுகளை சமமாக  வைத்துக்கொள்ள உதவும்.

பிஞ்சு வெள்ளரிக்காய் மிகவும் நல்லது. இதில், 90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை பழச்சாறுகளும் நல்லது.  சீரகம், வெந்தயம் போன்றவை உடல்சூடு தணிக்கும். மோர் சூட்டை தணிக்கும். தயிராக சாப்பிடாமல் அதை கடைந்து வெண்ணெயை எடுத்துவிட்டு,  மோர் சாப்பிடலாம். மஞ்சளில் உள்ள `குர்குமின்’ ஆன்டி இன்பெக்‌ஷனாக செயல்படக்கூடியது. புதினா, மல்லித்தழை ஜூஸ் போன்றவையும்  `டீஹைட்ரேஷன்’’ ஏற்படாமல் பாதுகாக்கும். இவை கோடையில் ஏற்படும் செரிமான கோளாறையும் சரிசெய்யும்.

தர்பூசணி தரும் நன்மைகள்

கோடை துவங்கிவிட்டால், வியர்க்குரு, சருமப்பிரச்னை, வயிற்றுப்பிரச்னை, உடல்சூடு என கோடைகால உபாதைகள் வரிசைகட்டுகின்றன. வழியெங்கும்  தண்ணீர், நீர், மோர் பந்தல், இளநீர், ஜூஸ், லஸ்ஸி, லெமன் சோடா விற்கும் தள்ளுவண்டி கடைகள், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் என திடீர்  கடைகள் முளைக்கின்றன. இவற்றில் கோடைக்கு ஏற்றது எது? அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் சீசனில் எந்த உணவுகள் சிறந்தவை, உடல்  உபாதைகளை ஏற்படுத்தாமலும், உடல் உபாதைகளுக்கு தீர்வாகவும் இருப்பவை எது என்ற கேள்வி எழுகிறது. கோடை காலத்துக்கு ஏற்றது, நீர்ச்சத்து  நிறைந்த தர்பூசணி. கொழுப்பு சத்தே இல்லாதது. வைட்டமின் ‘’ஏ’’ மற்றும் ‘’இ’’ நிறைந்த தர்பூசணியின் பலன்கள் ஏராளம். இதில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை இது தடுக்கிறது. தர்பூசணியில் உள்ள பொட்டாசியம்,  சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது. சிறுநீரக பிரச்னை அல்லது டையூரெட்டிக் பிரச்னையால் அவதிப்படுபவர்கள் இதை தினமும்  சாப்பிட்டால், அந்த பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

தர்பூசணியில் இருக்கும் லைகோபீன், சிட்ருல்லின் சத்துகள், மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டுகளாக செயல்படுகின்றன. உயர் ரத்தஅழுத்தத்தை  கட்டுப்படுத்த இவை உதவுகிறது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் ரத்தஅழுத்த பாதிப்புகளை குறைக்கவும் உதவுகிறது. இதில் இருக்கும் பொட்டாசியம்  கர்ப்பகாலத்தில் ஏற்படும் தசைபிடிப்பு பிரச்னையை தடுக்கிறது. லைகோபீன், புற்றுநோய் வருவதை தடுக்கிறது. தர்பூசணியை சாப்பிட்டால் வியர்வை வெளியேறுவது அதிகரிக்கும். இதனால், உடலின் அதிகப்படியான சூடு குறைந்து, குளிர்ச்சி ஏற்படும். வெயில்  காலத்தில் அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது சரும பிரச்னை. தர்பூசணியில் இருக்கும் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின்  ஆகிய இரண்டும் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. இவை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதில் உள்ள  குளூட்டாதியோன் சரும பராமரிப்புக்கும், நன்றாக முடி வளர்வதற்கும் உதவும்.

தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி, அன்றாடம் நாம் உட்கொள்ளவேண்டிய ஊட்டச்சத்தில், 25 சதவீத சத்துகளை கொடுக்கிறது. இது, சருமத்தில்  வெடிப்பு, சரும வறட்சி, சருமத்தில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் வராமலும் தடுக்கிறது. அதிக நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு தோலில் எரிச்சல்,  சருமம் கறுத்துப்போகுதல், உடலில் ஆங்காங்கே தடிப்புகள் ஆகியவை ஏற்படக்கூடும். தர்பூசணியில் இருக்கும் பொட்டாசியம், இந்த பிரச்னைகளை  தீர்க்கும். சருமத்தின் பொலிவை தீர்மானிப்பது மெலனின். இது, தர்பூசணியின் குளூட்டாதியோன் ஆன்டிஆக்ஸிடன்ட், மெலனின் உற்பத்தியை  அதிகரித்து, சருமத்துக்கு பொலிவை கொடுக்கிறது. கடினமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியை முடித்தவுடன் ஹைட்ரேஷனுக்காக  எலெக்ட்ரோலைட் சாப்பிடுவார்கள். அதற்கு பதிலாக தர்பூசணி சாப்பிடலாம். பொதுவாக எந்த பழத்தையும், ஜூஸாக அருந்தாமல் அப்படியே  சாப்பிடுவதுதான் நல்லது. காரணம், ஜூஸாக்கும்போது பழத்திலுள்ள நார்ச்சத்து குறைந்துவிடும்.

சர்க்கரை நோயாளிகள், தர்பூசணி சாப்பிடலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், அது தவறு. GI எனப்படும் Glycemic index சத்து ஒவ்வொரு  பழத்துக்கும், ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். தர்பூசணியில் அது அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால்,  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி, டி., லைகோபீன், சிட்ருல்லின், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள்  உள்ளன. இதிலுள்ள லைக்கோபீன், பீட்டா கரோட்டின் சத்துகள் இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. கொழுப்புச்சத்தே இல்லாத தர்பூசணியில்,  கலோரியும் மிக குறைவு. எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. இதில் 11 சதவீதம் வைட்டமின் ஏ, 13 சதவீதம் வைட்டமின் சி இருக்கிறது. இந்த  வைட்டமின் சத்துகள் மாரடைப்பை தடுக்க உதவுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்