SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரில் நல்ல மைலேஜ் கிடைக்க வழி?

2018-05-13@ 00:44:48

கார் வைத்திருப்பவர்களுக்கு எரிபொருள் பயன்பாடு என்பது மிகவும் முக்கியமானது. காரின் ஓட்டுமொத்த செலவும் இதை பொருத்துதான் அமைகிறது.  நீங்கள் கார் ஓட்டும் விதத்தை பொருத்தே எரிபொருள் பயன்பாடு அமையும். அதன் விவரம் இதோ...

* ஒவ்வொரு காரும் மெதுவாக செல்வதற்கும், மிதமான வேகத்தில் செல்வதற்கும், வேகமாக செல்வதற்கும் ஏற்றபடிதான் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.  எப்படியும் நீங்கள் குறைந்தது 1,000-3,000 ஆர்.பி.எம் மெயின்டெயின் செய்ய வேண்டும். அதைவிட குறைவான ஆர்.பி.எம்.மில் சென்றால் நீங்கள்  குறைவான கியரைத்தான் பயன்படுத்த வேண்டும் அதனால் உங்களுக்கு அதிகமாக பெட்ரோல் செலவாகத்தான் செய்யும். இதனால் குறைந்த  மைலேஜ்தான் பெற முடியும்.
* காரில் மித வேகமாக செல்லுதல் என்பது எரிபொருள் சிக்கனத்திற்கு சரியான வழிதான். மிதவேகம் என்பது 50-80 கி.மீ. வேகத்தில் செல்லுதல்.  எனினும், இது நீங்கள் செல்லும் காரை பொருத்தும், ரோட்டை பொருத்தும் அமையும். உங்கள் கார் காற்றை எளிதாக கிழித்துக்கொண்டு செல்லும்  வடிவில் அமைக்கப்பட்டிருந்து, நீங்கள் ஏற்றம் இறக்கம் இல்லாத நல்ல ரோட்டில் சென்று கொண்டிருந்தால் அதிகபட்ச மைலேஜ் கிடைக்கும் அல்லது  மைலேஜில் மாற்றம் இருக்கும்.
* காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட கார்கள் 90 கி.மீ. வேகத்தை தாண்டும்போது மைலேஜை இழக்கிறது. காரில்  வேகமாக செல்லும்போது நீங்கள் அதிகமான கியரைத்தான் பயன்படுத்த வேண்டும் அது உங்களை 150 கி.மீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில்  காரை ஓட்டிச்செல்ல அனுமதிக்கும். அதே நேரத்தில், நீங்கள் வேகமாக செல்லும்போது காற்றை கிழித்துக்கொண்டு செல்லும் திறன் நான்கு மடங்கு  அதிகரிக்கும். எனவே, அதற்கு தகுந்தாற்போல் இன்ஜின் வேலை செய்யவேண்டும்.
* நீங்கள் செல்லும் வேகத்திற்கு இணையாகவும், எதிர்காற்றை கழித்து செல்லவும் இன்ஜின் செலாற்ற வேண்டியுள்ளதால் பெட்ரோல் அதிகமாக  செலவாகும் அதேநேரத்தில் நீங்கள் மைலேஜையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மொத்தத்தில், மிதவேகமாக காரை ஓட்டும் போதுதான்  சரியான அளவு மைலேஜ் கிடைக்கும். நீங்கள் சிறந்த மைலேஜ் பெற 90-120 கி.மீ. வேகம் வரை உங்கள் காரையும், ரோட்டையும் பொருத்து  பயணிக்கலாம். அதன்மூலம் அதிகமான மைலேஜ் பெற முடியும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்