SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புது வடிவம் பெற்ற டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்

2018-05-13@ 00:43:45

டிவிஎஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் அப்பாச்சி ஆர்ஆர்310. ஜெர்மனியை சேர்ந்த பி.எம்.டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின்  தொழில்நுட்ப ஒத்துழைப்பில் பி.எம்.டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் இது என்பது சிறப்பு.  பி.எம்.டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் சூப்பர் பைக்கை போன்று வண்ணங்களுடன் மாற்றப்பட்டு இருக்கிறது. சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ண  கலவையில் பெயிண்ட் செய்யப்பட்டு இருப்பது அச்சு அசலாக பி.எம்.டபிள்யூ சூப்பர் பைக் போலவே இருக்கிறது. அதேபோன்று, பேரிங் பேனலில்  பி.எம்.டபிள்யூ லோகோ பொருத்தப்பட்டு இருப்பதுடன், ஆர்ஆர் என்ற வெள்ளை நிற ஸ்டிக்கர் அதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. பேரிங்  பேனலில் ஏர் வென்ட்டுகள் போன்ற தோற்றத்தை அளிக்கும் கருப்பு வண்ண ஸ்டிக்கர் வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறது.

பி.எம்.டபிள்யூ பைக் போல் மாறுதல் செய்யப்பட்டிருக்கும் இந்த பைக்கின் சாவியும் பி.எம்.டபிள்யூ பிராண்டில் மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த பைக்,  பி.எம்.டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக் அளவுக்கு இல்லை என்றாலும், இதன் இன்ஜின் சிறந்த செயல்திறனை பெற்றிருக்கிறது. இந்த இன்ஜின்,  அதிகபட்சமாக 34 பி.எஸ் பவரையும், 27.3 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. சாதாரண சாலை மற்றும் ரேஸ் டிராக்குகளில்  ஓட்டுவதற்கு ஏற்ப சிறப்பான செயல்திறன் மற்றும் ஏரோடைனமிக்ஸ் தத்துவப்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, செயல்திறனில் ஏமாற்றம்  தராது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PlasticawarenessLondon

    லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

  • stalin_arrestkaithu11

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மதுராந்தகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

  • metrorayil_train11

    டெல்லியில் ஜனக்புரி மேற்கு - கால்காஜி மந்திர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை சோதனை ஓட்டம்

  • northkores_minesexplodes1

    அணு ஆயுத சோதனைத்தளத்தில் உள்ள சுரங்கங்களை வெடிக்க செய்தது வட கொரியா!!

  • 25-05-2018

    25-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்