SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டர் - ஏத்தர் எஸ்340

2018-05-13@ 00:42:49

கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏத்தர் எனர்ஜி என்ற நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இந்தியாவின்  முதல் எலெக்ட்ரிக் ஸ்மார்ட் ஸ்கூட்டரை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த எலெட்ரிக் ஸ்கூட்டருக்கு எஸ் 340 என  பெயரிடப்பட்டுள்ளது. இதன் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்ஸ்தான் இதன் முக்கிய அம்சம். இதில், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி,  பார்க்கிங் அசிஸ்ட், நேவிகேஷன் அசிஸ்ட், வாகனத்தை சார்ஜ் செய்யும் இடங்களை தேடுவது ஆகிய வசதிகள் உள்ளது. மேலும், இந்த ஸ்கூட்டரில்  சிபிஎஸ், எல்.இ.டி. லைட்டிங், சீட்டிற்கு அடியில் லைட் என பல கவனிக்கத்தக்க அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டர் குறைந்த எடை  கொண்ட அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ள ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மூலம் பைக்கில் எவ்வளவு சார்ஜ் உள்ளது, பைக் தற்போது எந்த இடத்தில் உள்ளது, சார்ஜ் ஏறும்  சமயங்களில் எவ்வளவு சார்ஜ் ஏறியுள்ளது, இதை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என பல்வேறு தகவல்களை நமது ஸ்மார்ட்  போனிலேயே பெற முடியும். இதில், லித்தியம் ஐயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழு சார்ஜ் செய்தால் சுமார் 60 கி.மீ.,வரை பயணம் செய்ய  முடியும். இந்த பைக் அதிகபட்சமாக 72 கி.மீ., வேகத்தில் செல்லக்கூடியது. இதில் உள்ள பாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜி மூலம் 50 நிமிடத்தில் 80 சதவீத  பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த பேட்டரி சுமார் 50,000 கி.மீ. வரை உறுதியுடன் இருக்கும்.

தற்போது டுவென்டி டூ மோடார் பிளோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.74,740-க்கும் ஒக்கிநவா பிரைஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.59,899-க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. ஏத்தர் எஸ்340 விலை, இந்த இரண்டு ஸ்கூட்டர்களுக்கும் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஸ்மார்ட்  ஸ்கூட்டராக இருப்பதால் இதன் விலை மற்ற சாதாரண எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்