SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்பின் மறுவடிவம் அன்னை

2018-05-13@ 00:30:41

தன்னலம் கருதாத படைப்பு ஒன்று உண்டு என்றால் அது அன்னை மட்டுமே என்றால் அது மிகையாகாது. அம்மா என்ற சொல்லை தமிழ் மொழியைத் தவிர வேறு எந்த மொழியிலும் சிறப்பாக எடுத்து இயம்ப முடியாது என்பது உலகறிந்த தமிழ்அறிஞர்கள் கருத்தாகும். அம்மா எனும் வார்த்தையின் ‘அ’ முதல் எழுத்து உயிர் எழுத்து. கருவில் உயிருக்கு உயிர் கொடுக்கிறாள் என்பதை விளக்குகிறது. கருவில் உருவான உயிர் உருவாக்கம் பெருவதற்கு, தாய் உடல்(மெய்) கொடுக்கிறாள் என்பதை குறிக்கவே ‘ம்’ எனும் மெய் எழுத்து அமைந்தது. தான் உருவாக்கிய குழந்தையை பத்து மாதங்கள் சுமந்து, பெற்று, உலகின் வெளிச்சத்தை காண வழிகாட்டுகிறாள் என்பதையே கடைசி எழுத்தான உயிர்மெய் எழுத்தான ‘மா’, குறிக்கிறது.  இந்த தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் என மூன்று எழுத்துக்கள் சேர்ந்து அம்மா என்ற சொல் உருவாக்கம் பெற்றது.

“மேற்கத்திய நாடுகளில் பெண் என்பவள் தோழியாக, மனைவியாக பார்க்கப்படுகிறாள். ஆனால், கிழக்கிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் மட்டும் பெண் என்பவள் தாயாக பார்க்கப்படுகிறாள். இந்தியாவில் யாசகம் கேட்பவர்கள் யாரும், சகோதரி, எனக்கு யாசகமிடுங்கள் என்று கூறுவதில்லை, தாயே யாசகமிடுங்கள் என்று கூறியே கேட்கிறார்கள். ஆக இந்தியாவில் பெண் என்பவள் தாயாக தரிசனம் தரும் தெய்வம். அவள் தனது முழு வாழ்க்கையையும், தாய்மைக்கே அர்பணிக்கிறாள்” இது சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்திய கலாச்சாரத்தில் பெண்ணின் நிலைப்பற்றி பெருமையாகப் பேசியது. இது போல், அன்னையின் பெருமை குறித்து அறியாதவர்கள், பேசாதவர்கள் இவ்வுலகில் யாருமிலர்.

உலகில் கெட்ட பிள்ளைகள் உண்டு, ஆனால் எங்கும் கெட்ட தாயினைக் காணமுடியாது. அதிலும் பாசமில்லாத அன்னையினைக் காண்பது அரிதினும் அரிது. தாயைப் புகழ்ந்து பேசாத, அருமையை உணர்த்தாத மதங்களும், மனிதர்களும் இல்லை.  இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் பாரதத்தாயின் குழந்தைகளாக பார்க்கப்படுகின்றனர்.  தாயின் பெருமையை அனைத்து மதங்களும் ேபாற்றி புகழ்கின்றன. இந்து மதத்தில் தாய் கடவுளாகவே பார்க்கப்படுகிறார். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதில் அன்னை முதலாவதாக பிரதானப்படுத்தப்படுகிறாள். அன்னையின் அருமை குறித்து இஸ்லாத்தின் புனித நூலான ‘குர்ஆன்’ கூறுகையில், ‘ஒரு மனிதனின் அழிக்க முடியாத பாவங்களில் ஒன்று கடைசி காலத்தில் தாயையும், தந்தையையும் புறக்கணித்தல்’ என்கிறது. முகமது நபி(ஸல்) கூறுகையில், ‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது’ என்று கூறியது மட்டுமின்றி வாழ்ந்து காட்டினார்.  

நவீன காலத்தில் கூட தாயின் அருமையை உணர்த்த புகழ்பெற்ற தலைவர்கள் மூலம் ஏதாவது அருஞ்செயல் நிகழ்த்த காலம் தவறுவதில்லை.  அரசியல் தலைவர்கள் உட்பட சாதனை படைத்த அனைவரும், அம்மா என்ற வார்த்தையின் ஆழம் தெரிந்து வாழ்க்கையில் வளர்ந்தவர்கள். ஆனால், இன்றுள்ள காலத்தில், பணத்தை மையமாக வைத்து வாழும் உறவின், நட்பின் சூழல்களுக்கு இடையே நாம் வாழ்ந்து வருகிறோம். தாயின் ரத்தத்தின் உடல் வளர்த்து, தந்தையின் வியர்வையில் உயர்ந்து, பணம் ஈட்டும் ஆசையில்,  நம்மை உருவாக்கியவர்களை காக்க, நினைக்க, மறக்கிறோம். தாயின் உன்னதத்தை உணர்ந்த இந்த பாரதத்தில் முதியோர் இல்லங்கள் அதிகரிப்பது நம் பாரம்பரியத்தின் சிறந்த அடையாளங்களுக்கு உகந்தது அல்ல.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்