SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னையர் தினம் உருவானது எப்படி

2018-05-13@ 00:29:42

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர். ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு, வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது.

 ஆனால் நாம் கொண்டாடும் அன்னையர் தினம், அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அன்னா ஜார்விஸ் என்பவர்தான் துவக்கி வைத்து வழிகாட்டியவர். அன்னா ஜார்விஸ் திருமணமானவரோ, பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதால் இவரை மையப்படுத்தித்தான் அன்னையர் தினமே உருவாக்கப்பட்டது. தனது அன்னையைப் பாராட்டி, சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ், ஏதாவது ஒரு நாளையாவது, எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும், தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

  அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அன்னா ஜார்விஸ் அவரது ஆதரவாளர்களும் பொதுமக்களுக்கு நேரடியாக கடிதங்களை எழுதி அன்னையர் தினத்திற்கு பெரும் ஆதரவு திரட்டினர். இதன் காரணமாக 1911ஆம் ஆண்டு அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்யப்பட்ட முழக்கங்களின் வாயிலாக 1914ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி அதிபர் உட்ரோவ் வில்சன் கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை அன்னையர் தினமாகக் கொண்டாடுவது என்பதுதான் அந்த கூட்டறிக்கையில் இருந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramalan_sirapu111

    இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

  • cake_decor11

    ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

  • RajivGandhi27thanniversary

    ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

  • lasvegas_theme111

    அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

  • rajiv_27anni

    27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்