SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அன்னையர் தினம் : பெண் என்னும் பிரம்மா..!

2018-05-13@ 00:29:01

தாய் என்பவள் நமக்கு  ஜீவன் கொடுத்தவள். அவளது அபிலாஷைகளை பூர்த்திசெய்ய வேண்டியது ஒவ்வொரு  புத்திரனின் கடமையாகும். பொதுவாக இறந்த பிறகுதான் ஒவ்வொருவரின் அருமை  நமக்கு புரிகிறது. பெத்த தாயை காப்பாற்றாமல் ஆசிரமங்களில் எத்தனையோ பேர்  சேர்த்துள்ளார்கள். அனாதை ஆசிரமங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக  இருக்கிறது. தாயை போற்றாத குடும்பங்கள் நன்றாக இருப்பதில்லை.  பத்துமாதம் வயிற்றில் சுமந்து இரவு, பகலாக கண்விழித்து நாளெல்லாம்  பட்டினியாய் கிடந்து, ஒரு கணமேனும் நம் பசி பொறுக்காது உணவூட்டி மேலெல்லாம்  இளைத்திட பாடுபட்டவர் அந்த தாய். எம்மை வித்தகனாய் கல்வி பெற வைத்து,  மேன்மையாய் வாழச் செய்த அந்த கண் கண்ட தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, பணிவிடை  செய்து மகிழ்விக்க ஒருநாள் போதாது.

 தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை என்பது பழமொழி. ஆம்.. இவ்வுலகில் தாயை தெய்வமாக மதிப்பவனுக்கு அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கும். தான் பிறந்தது முதல் ஒரு பெண்ணானவள் பல்வேறு பரிமாணங்களை பெறுகிறாள். ஒரு கால கட்டம் முதல், தான் மண்ணில் புதையுறும் வரை தன்னலம் பேணாது உழைத்துக்கொண்டே இருப்பவள் தாய். அவளை தூக்கி வைத்து கொண்டாடாவிட்டாலும் அவரை போற்ற ஒரு நாள் கொண்டாடப்படுகிறது. அதுதான் அன்னையர் தினம்... நாடெங்கும் மே மாதம் 14-ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

 பெண் என்பவள் பூப்பெய்தும் வயதை அடைந்து, திருமண பந்தத்தில் இணைந்து, கருவுற்று தாயாகி, குழந்தையை பெற்றதும் முழுமை அடைகிறாள். பிரம்மா இவ்வுலகில் உள்ள உயிர்களை படைக்கிறார் என்றால் பெண்ணும் அதே பணியை செய்கிறாள். பெண் என்பவள் இரு முறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது, அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும்போது ஒரு முறையும், அவளது வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்கும்போது ஒரு முறையும் என பெண் மறுஜென்மம் எடுக்கிறாள். பிரசவம் என்பது பெண்ணுக்கு தாள முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன், அந்த வலி காற்றில் காணாமல் போய்விடுகிறது.

 தான் உண்ணாமல் தன் குழந்தை உண்ண வேண்டும் என்று நினைக்கும் ஒரே உள்ளம் தாய்தான். ஒரு குழந்தையை கருவுற்று இருக்கும் போதில் இருந்தே கண்ணை இமை காப்பதற்கு மேலாக தன் குழந்தையை பாதுகாத்து வருகிறாள். அத்தகைய தாயை கடைசி காலத்தில் காக்க முடியாமல் முதியோர் இல்லங்களில் விடும் பிள்ளைகளை என்னவென்று சொல்வது. தம்மை வளர்க்க தாய் பட்ட பாடுகளை மறந்த சில பிள்ளைகள் தன் தாய்க்கு ஒரு பிடி உணவு அளிக்க மனதளவில் வக்கற்று போய், அந்த தாய்க்கு மூன்று பிள்ளைகள் என்றால் மாதம் ஒருவர் பராமரிப்பது என்று கணக்கு போடுகின்றனர். அவர் இருக்கும்போது ஒரு பிடி உணவுக்கு சண்டையிட்டு கொள்ளும் சகோதரர்கள் அவர் இறந்தபின்னர் வடை, பாயாசம் என அறுசுவை உணவுகளை செய்து படைப்பதில் என்ன பயன்! மகனோ, மகளோ, தங்களை உள்ளங்கையில் தாங்குவதை பார்த்து பூரித்துப்போகும் தாய்-தந்தையரை காட்டிலும், இந்த உலகில் எது நமக்கு கிடைத்தாலும் அது துச்சமே!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-01-2019

  23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • aalangatty_kanamalai11

  டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

 • northensnow

  பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • baloon_worstand

  ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

 • redmoon_lunar12

  சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்